முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வா, இல்லையா? என்ன சொல்ல வருகிறார் தோனி?

திங்கட்கிழமை, 26 மே 2025      விளையாட்டு
Dhoni 2024-10-26

Source: provided

அகமதாபாத் : தான் ஓய்வு பெறுகிறேன் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் மீண்டும் விளையாட வருகிறேன் என்றும் செல்லவில்லை என தோனி தெரிவித்துள்ளார்.

வெற்றியோடு நிறைவு... 

நடப்பு ஐ.பி.எல். சீசனை வெற்றியோடு நிறைவு செய்துள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. எப்போதும் போல தனது ஓய்வு குறித்த முடிவை சஸ்பென்ஸாகவே இந்த சீசனிலும் அப்படியே உயிர்ப்போடு தோனி வைத்துள்ளார். இந்நிலையில், கடைசி லீக் ஆட்டத்தில் சி.எஸ்.கே கேப்டன் தோனி தெரிவித்தது, “ஒவ்வொரு சீசனிலும் புதிய சவால். கேரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் போது உடலை கூடுதல் கவனம் கொண்டு பராமரிக்க வேண்டும். சி.எஸ்.கே அணி நிர்வாகம் எனக்கு உதவியாக உள்ளது. எனது உடலும் ஒத்துழைக்கிறது. தேசத்துக்காக சர்வதேச அளவில் விளையாடிய போது உடல் அளவில் தொந்தரவு எதுவும் இல்லை.

நேரம் இருக்கிறது...

எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4 அல்லது 5 மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் உடலை  பிட்டாக வைத்துக்கொள்ள 15 சதவீதம் கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டி உள்ளது. இது தொழில்முறை கிரிக்கெட். அதனால் இதில் பெஸ்ட் லெவல் என்பது முக்கியம். எனது உடலைத் தகுதியுடன் வைத்திருக்க விரும்புகிறேன். நான் மீண்டும் ராஞ்சிக்கு சென்று, மோட்டார் சைக்கிள் ஓட்டி மகிழ்வேன். அதன் பின்னர் ஓய்வு குறித்து முடிவு செய்வேன். நான் ஓய்வு பெறுகிறேன் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் மீண்டும் விளையாட வருகிறேன் என்றும் செல்லவில்லை. அது குறித்து முடிவு எனக்கு நேரம் இருக்கிறது” என்றார்.

கடைசி ஆட்டம்...

நடப்பு சீசனில் 13 இன்னிங்ஸ் விளையாடியுள்ள தோனி, மொத்தமாக 196 ரன்கள் எடுத்துள்ளார். தலா 12 போர் மற்றும் சிக்ஸர் விளாசி உள்ளார். விக்கெட் கீப்பராக 6 கேட்ச் மற்றும் 5 ஸ்டம்பிங் செய்துள்ளார். தற்போது 43 வயதான தோனி, கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார். அடுத்த சீசனில் அவர் 44 வயதை எட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் சென்னை மண்ணில் தான் தனது கடைசி கிரிக்கெட் ஆட்டம் இருக்கும் தோனி ஏற்கெனவே உறுதிபட தெரிவித்துள்ளார். அதை வைத்து பார்க்கும்போது அடுத்த சீசனிலும் தோனி விளையாட வாய்ப்பு உள்ளது என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து