முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.கே. பயிற்சியாளராகிறார் சுரேஷ் ரெய்னா? ரசிகர்கள் ஆர்வம்

திங்கட்கிழமை, 26 மே 2025      விளையாட்டு
CSK-1 11-04-2025

Source: provided

சென்னை : பேட்டிங் கோச் மைக்கேல் ஹஸ்ஸியின் இடத்திற்கு சுரேஷ் ரெய்னா வருவது பொருத்தமாக இருக்கும் என  ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

‘சின்ன தல’...

சி.எஸ்.கே. ரசிகர்களைப் பொறுத்தவரை தோனி ‘தல’ என்றால் சுரேஷ் ரெய்னா ‘சின்ன தல.’ அவர் சி.எஸ்.கே.-க்கு ஆடிய வரையில் மிடில் ஓவர், மிடில் ஆர்டர் பிரச்சினை சி.எஸ்.கே.வுக்கு எழுந்ததே இல்லை. அவர் போன்ற வீரர்கள் போன பிறகே சி.எஸ்.கே. அணி சரிவடையத் தொடங்கியது. இப்போது அப்படிப் போன வீரர்களை ஏதாவது ஒரு விதத்தில் அணிக்கு உதவியாகப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. அந்த விதத்தில் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவை ஐபிஎல் 2026 சீசனுக்காக சி.எஸ்.கே. அணி பேட்டிங் பயிற்சியாளராகக் கொண்டு வரலாம் என்ற முடிவெடுத்திருப்பதாக பிரபல ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

பொருத்தம்...

மைக்கேல் ஹஸ்ஸியின் கைவண்ணத்தில் சி.எஸ்.கே.வுக்கு பல பினிஷிங்குகளையும், மிடில் ஆர்டரில் ஸ்திரத்தையும் ஏற்படுத்தியவர் சுரேஷ் ரெய்னா. இந்நிலையில், இப்போதைய பேட்டிங் கோச் மைக்கேல் ஹஸ்ஸியின் இடத்திற்கு சுரேஷ் ரெய்னா வருவது தானே பொருத்தம் என்று ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

மவுனம்...

 நேற்று முன்தினம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சி.எஸ்.கே. ஆடிய ஆட்டத்தின் போது வர்ணனையில் இருந்த சுரேஷ் ரெய்னா, சி.எஸ்.கே.வின் பேட்டிங் பயிற்சியாளராக வரும் வாய்ப்பை லேசாகக் கோடிட்டு காட்டினார். இது குறித்து அசிஸ்டண்ட் பவுலிங் கோச் ஸ்ரீராமிடம் கேள்விகள் எழுப்பப்பட, அவர் பதில் கூறாமல் மவுனம் காத்தார். “எனக்குத் தெரியவில்லை. ரெய்னா அப்படி எதுவும் கூறினாரா என்பதை அவரிடம் நான் கேட்க வேண்டும்.” என்றார்.

நிர்வாகம் தீவிரம்...

முன்னதாக, சி.எஸ்.கே. - குஜராத் டைட்டன்ஸ் போட்டிக்கு முன்பாக ஸ்டூடியோவில் சி.எஸ்.கே.வின் 2025 சீசன் பற்றிய அலசலில் ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் பாங்கருடன் பேசிய சுரேஷ் ரெய்னா புதிய பேட்டிங் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பேச்சுக்களில் சி.எஸ்.கே. நிர்வாகம் இருப்பதாகத் தெரிவித்தார். அப்போது ஆகாஷ் சோப்ரா, அந்தப் புதிய பேட்டிங் கோச்சின் பெயர் ‘எஸ்’-இல் (ஆங்கில எழுத்து) ஆரம்பிக்குமா என்றும் அவர் அதிவேக அரைசதம் எடுத்தவரா என்றும் கேட்க ரெய்னா அதற்கு உடன்பாட்டு உடலசைவில் பதிலிறுத்தினார். உடனேயே ஆகாஷ் சோப்ரா, ‘இங்குதான் முதலில் கேட்கிறீர்கள்’ என்றும் முழங்கினார்.

உற்சாகம்...

சி.எஸ்.கே. அணிக்காக சுரேஷ் ரெய்னா, 200 போட்டிகளில் ஆடி, 5529 ரன்களை குவித்துள்ளார். 2014 ஐபிஎல் தொடரில் 16 பந்துகளில் அதிவேக அரைசதம் குவித்தார் ரெய்னா. இப்போது ரெய்னாவை பேட்டிங் கோச் ஆக நியமித்தால் நிச்சயம் சி.எஸ்.கே. ஓய்வறையில் புத்துணர்வும், உற்சாகமும் தோன்றும் என்பதில் வியப்பென்ன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து