முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றால அருவிகளில் குளிக்க 5-வது நாளாக தடை நீட்டிப்பு

வியாழக்கிழமை, 29 மே 2025      தமிழகம்
Kutralam--2023-07-06

தென்காசி, குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5-வது நாளாக தடை நீட்டிக்கப் பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தமிழகத்தில் தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையடிவார பகுதிகளில் கனமழை பெய்தது. 4 நாட்களுக்கு முன்னர் இரவில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று முன்தினம் காலையிலும் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் தொடர் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவியில் பாதுகாப்பு ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளையும் மூழ்கடித்தவாறு தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க, நேற்று  5வது நாளாக தடையை தென்காசி மாவட்ட நிர்வாக நீட்டித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து