முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் சடலமாக மீட்பு

வியாழக்கிழமை, 29 மே 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

காக்கிநாடா: கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் மூழ்கி உயிரிழந்தனர். 

ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே உள்ள கே. கங்கவரம் மண்டலம், ஷெரிலங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கடந்த செவ்வாய் கிழமை பலர் கலந்து கொண்டனர். மதிய உணவுக்கு பின்னர், இதில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த காக்கிநாடா, மந்தவேடு, போலாவரம் பகுதிகளை சேர்ந்த 14 முதல் 20 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்கள் அதே பகுதியில் உள்ள கவுதமி கோதாவரி ஆற்றில் நீச்சல் பழக சென்றனர்.

11 பேர் ஆற்றில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், மற்றவர்கள் அந்த இளைஞனை காப்பாற்ற பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதுபோல் 8 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். மீதமுள்ள 3 பேர் கரைக்கு பத்திரமாகத் திரும்பினர். இவர்கள் கொடுத்த தகவலின் படி, போலீஸார், பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், பெற்றோர், உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.

ஆற்றில் இறங்கிய தீயணைப்புப் படையினர் 8 பேரை சடலமாக மீட்டனர்.  அனைத்து சடலங்களும் மாமிடிவரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலங்களை பார்த்து பெற்றோர் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து