முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் இடமாற்றம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு கொலீஜியம் பரிந்துரை

புதன்கிழமை, 28 மே 2025      இந்தியா
Supreme-Court 2024-11-269

புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கடந்த 13-ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் மூத்த நீதிபதிகளில் ஒருவரான அபய் ஓகாவும் ஓய்வு பெற்றார். இதை அடுத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 இல் இருந்து 31 ஆக குறைந்தது. தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்ற நிலையில் கடந்த 26-ம் தேதி சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் கூடியது. தொடர்ந்து மூன்று மாநில உயர் நீதிமன்றங்களில் இருந்து மூன்று நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதன்படி கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி அஞ்சார்யா, ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி விஜய்பிஷ்னு, மும்பை ஐகோர்ட் நீதிபதி சந்துருகர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கொலீஜியம் இந்தியாவின் தலைமை நீதிபதி தலைமையில் செயல்படுகிறது. இந்த கொலீஜியம் சுப்ரீம் கோர்ட் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்கிறது. நீதிபதிகளின் பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் பிற நிர்வாக முடிவுகளை எடுக்கிறது. இந்தநிலையில், சென்னை உள்ளிட்ட ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் 4 பேரை இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டிற்கு கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. 

இடம் மாற்றம் செய்யப்பட்ட நீதிபதிகள் விவரம் வருமாறு:- சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீராமை, ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டிற்கு கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள மணீந்திர மோகனை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திரிபுரா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள அப்ரேஷ் குமார் சிங்கை தெலுங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள ராசந்திர ராவை திரிபுரா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து