முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாநிலங்களில் நடைபெற இருந்த பாதுகாப்பு ஒத்திக்கை தள்ளிவைப்பு

வியாழக்கிழமை, 29 மே 2025      இந்தியா

டெல்லி, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நேற்று நடைபெற இருந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானது. இதை தொடர்ந்து கடந்த 7ம் தேதி நாடு முழுவதும் போர் கால பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அன்றைய தினமே பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.

போர் ஒத்திகையின்போது எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது, காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை எப்படி செய்வது, சைரன் ஒலி எழுப்பி மக்களை எச்சரிக்கை செய்வது போன்ற செயல்முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன.

இந்நிலையில், 4 மாநிலங்களில் நேற்று போர்க்கால ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் எனக் கூறப்பட்டு இருந்தது. இந்த போர்க்கால ஒத்திகையின்போது கட்டுப்பாட்டு அறை, வான் பாதுகாப்பு அமைப்பு செயல்பாடுகள் குறித்து சோதனை நடத்தப்பட உள்ளது.  

இந்த நிலையில், நேற்று நடைபெற இருந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது தொடர்பான மாற்று தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியான காரணங்களுக்காக இந்த ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என தகவல். ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து