முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 உக்ரைன் கிராமங்களை கைப்பற்றியது ரஷ்யா

புதன்கிழமை, 28 மே 2025      உலகம்
Ukraine 2024 11 20

Source: provided

கீவ், : உக்ரைன் கிராமங்களை கைப்பற்றியது ரஷ்யா

ரஷ்ய எல்லையில் உள்ள உக்ரைனின் சுமி பிராந்தியத்தின் கவர்னர், உக்ரைனின் 4 கிராமங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக ரஷ்யா-உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கோரி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தனித்தனியே பேசினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின், தானாக பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், இருநாட்டு முக்கிய பிரதிநிதிகள் கூடி, போர்க்கைதிகளை விடுவிப்பது என்று உடன்பாடு செய்தனர். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள், சிறைபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 1,000 பேர் பரிமாறிக் கொள்ளப்பட்டனர்.

இருந்தபோதிலும் இதே நாட்களில் ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது. திங்கட்கிழமை இரவில் மட்டும் 355 டிரோன்களை வீசி சரமாரியாக ரஷ்யா தாக்கியது. மொத்தம் 4 நாட்களில் 900 டிரோன்கள் ஏவப்பட்டதாக உக்ரைன் கூறி உள்ளது. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புதினுக்கு ஏதோ ஆகிவிட்டது. காரணமில்லாமல் உக்ரைன் பொதுமக்களை கொன்று குவிக்கிறார்" என்று வலைத்தளத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ரஷ்யா, தொடர் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி இருப்பதுடன் எல்லையோர உக்ரைன் கிராமங்களை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போர் ஆரம்பித்த காலத்தில், உக்ரைன் படைகள், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை கைப்பற்றியதாக அறிவித்தன. குர்ஸ்க் பகுதியின் எல்லையான சுமி என்ற இடத்தை மையமாக கொண்டு இந்த இடையக மண்டலத்தை உருவாக்க ரஷ்யா முயன்று வருகிறது. இதன் எதிரொலியாக ரஷ்யா, உக்ரைன் எல்லையில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. அடுக்கடுக்கான குண்டுவீச்சு மற்றும் டிரோன் தாக்குதலால் உக்ரைனின் எல்லையோர 4 கிராமங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டு விட்டதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது. இருந்தபோதிலும் அந்த கிராமங்களில் மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்றும், உக்ரைனுக்குள் முன்னேற ரஷ்யா முயற்சிப்பதாக உக்ரைன் ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து