முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகும்: ராஜ்நாத் சிங் தகவல்

வியாழக்கிழமை, 29 மே 2025      இந்தியா
Rajnath-Singh-2023-04-2

புதுடெல்லி, விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பஹல்காமில் கடந்த ஏப்.22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.  இதற்கு பதிலடியாக,  பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர்  என்ற பெயரில் தாக்குதலை நடத்தியது.  இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன.  

இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) வருடாந்திர தொழில் உச்சி மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்  உரையாற்றும்போது, நம்முடைய நாட்டின் பாதுகாப்பில் மேக்-இன்-இந்தியா அத்தியாவசியம் வாய்ந்த ஒரு திட்டம் ஆகும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் திறமையான நடவடிக்கையில் அது ஒரு முக்கிய பங்காற்றியது என பேசினார். இதேபோன்று, ஏ.எம்.சி.ஏ. திட்டத்தின் செயல் மாதிரி வழியே, உள்நாட்டு பாதுகாப்பு திறனை இன்னும் மேம்படுத்துவது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என தெளிவுப்படுத்திய சிங், நிலப்பகுதி மற்றும் அரசியல் ரீதியாக அந்த மக்கள் பிரிந்திருந்தபோதும், விரைவிலோ அல்லது பின்னரோ, அவர்களாகவே விரும்பி இந்தியாவுக்கு திரும்புவார்கள் என்றும் பேசியுள்ளார். அவர்கள், இந்தியாவுடன் ஆழ்ந்ததொரு பிணைப்பை கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரே தவறாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானுடன் இனி பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவை பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெளிவுப்படுத்தினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து