முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கை பாதுகாப்பில் சிக்கிம் முன்மாதிரி: பிரதமர் பெருமிதம்

வியாழக்கிழமை, 29 மே 2025      இந்தியா
Modi PM 2024-12-20

புதுடெல்லி, சிக்கிம்  இயற்கை பாதுகாப்பில் முன்மாதிரியாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி  சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். சிக்கிம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் நேற்று காலை கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார்.

இதற்காக சிக்கிமின் கேங்டாக்கில் மிகப்பெரிய அளவில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 11 மணிக்கு தொடங்கும் நிகழ்வு ஒரு மணிநேரம் முன்னதாக காலை 10 மணிக்கே தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திடீரென்று மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது. மக்கள் மத்தியில் மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ராவிலிருந்து இருந்து காணொலி காட்சி மூலம் அவர் உரையாற்றியதாவது:- 

சிக்கிம் இமயமலையின் மாநிலம் அது "நாட்டின் பெருமை" அந்த மாநிலத்தின் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். கடந்த மாதம் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சரியான பதிலடி. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாடு ஒன்றுபட்டுள்ளது. இந்தியா வல்லரசாக மாற்றுவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. சிக்கிம் இயற்கைப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது, இது மாநிலத்திற்கு கிடைத்த ஒரு பெரிய சாதனை ஆகும். சிக்கிம் இயற்கை பாதுகாப்பில் முன்மாதிரியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து