முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க 44 எம்.எல்.ஏ.கள் ஆதரவு

வியாழக்கிழமை, 29 மே 2025      இந்தியா
BJP 2023-11-05

Source: provided

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க 44 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறை சம்பவங்களில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரக்கணக்கான வீடுகள், வழிபாட்டுத்தலங்களை தரைமட்டமாக்கபட்டன. இதற்கிடையே இந்த கலவரத்தை தடுக்க தவறியதாக முதல்வர் பைரேன் சிங் தனது பதவியை கடந்த பிப்ரவரி மாதம் அவர் ராஜினாமா செய்தார். எனவே மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், அங்கு மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைக்கும் முயற்சிகளை பா.ஜனதா தொடங்கி இருக்கிறது. இதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ. தோக்சோம் ராதேஷியாம் சிங் தலைமையில் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் கவர்னர் அஜய்குமார் பல்லாவை சந்தித்து பேசினர். அப்போது மாநிலத்தில் புதிய அரசு அமைப்பதற்கு 44 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக தெரிவித்தனர்.

60 உறுப்பினர் கொண்ட மணிப்பூர் சட்டசபையில் தற்போது 59 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் பா.ஜனதா கூட்டணியில் 32 மெய்தி எம்.எல்.ஏ.க்கள், 3 மணிப்பூரி முஸ்லிம் கட்சி எம்.எல்.ஏ.க்கள், 9 நாகா எம்.எல்.ஏ.க்கள் என 44 பேர் உள்ளனர். இவர்களை தவிர 5 காங்கிரஸ் (மெய்தி) எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். மீதமுள்ள 10 எம்.எல்.ஏ.க்கள் குகி பிரிவினர் ஆவர்.  

முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராதேஷியாம் சிங், "மணிப்பூரில் மக்களின் விருப்பப்படி ஒரு அரசை அமைக்க 44 எம்.எல்.ஏ.க்கள் தயாராக உள்ளனர். இதை கவர்னரிடம் எடுத்துக்கூறினர்.  நாங்கள் கூறியதை கவர்னரும் கவனத்தில் எடுத்துக்கொண்டார். மக்களின் நலன் கருதி அடுத்தகட்ட நடவடிக்கைகளை அவர் எடுப்பார். மணிப்பூர் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முதலில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகள், தற்போது கலவரம் காரணமாக மேலும் இரண்டு ஆண்டுகளை இழந்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து