முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன்: சாட்விக் - ஷிராக் இணை காலிறுதிக்கு முன்னேற்றம்

வியாழக்கிழமை, 29 மே 2025      விளையாட்டு
Satwick-Shirack

Source: provided

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் - ஷிராக் ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியது.

நேர் செட்டில்... 

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட் ஜோடி, 41-வது இடத்தில் உள்ள மலேசியாவின் சூங் ஹான் ஜியான், முஹம்மது ஹைகல் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ஷாட்விக்-ஷிராக் ஜோடி 21-16, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

ஷாட்விக் - ஷிராக் வெற்றி...

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 2-வைத்து சுற்று ஆட்டத்தில் இந்தோனேசியாவின் சபர் காரியமன் மற்றும் முஹம்மது ரெசா ஜோடியை 19-21, 21-16, 21-18 என்ற கணக்கில் ஷாட்விக் - ஷிராக் இணைந்து வீழ்த்தினர். இந்த ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் வரை நீடித்தது.

வெளியேறிய லக்சயா சென்... 

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 17-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்சயா சென், 19-ம் நிலை வீரரான சீன தைபேவின் லின் ஹன் யியுடன் மோதினார். இதில் முதல் செட்டை லக்சாய சென் 21-15 என கைப்பற்றினார். 2-வது செட்டில் பதிலடி கொடுதத லின் ஹன் அந்த செட்டை 21-17 என தன்வசப்படுத்தினார். இதனால் வெற்றியை தீர்மானித்த கடைசி செட் ஆட்டம் பரபரப்பானது. இதில் லக்சயா சென் 5-13 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்த நிலையில் முதுகு வலி காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் லின் ஹன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கலப்பு பிரிவில் தோல்வி...

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர், ருத்விகா ஷிவானி காடே ஜோடி 21-16, 21-19 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சென் ஹி யி, பிரான்செஸ்கா கோர்பெட் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும் ஹாங்காங்கின் டாங் சுன் மற்றும் டீஸ் யிங் சூட் ஜோடியிடம் நேர் செட்களில் வீழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து