முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ஜூன் 3-ம் தேதி முதல் மின்சார பேருந்து சேவை: முதவர் தொடங்கி வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, புதிய மின்சார பேருந்துகள் ஜூன் 3-ந் தேதி முதல் சென்னையில் இயக்கப்பட உள்ளன.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 5 பணிமனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த வகையில், வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 பேருந்துகள் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு பேருந்துகளுக்கு சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளை சமீபத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பார்வையிட்டார். இனி, வியாசர்பாடி பணிமனையில் மின்சார பேருந்துகள் மட்டும் நிறுத்தப்படும். இங்குள்ள டீசல் பேருந்துகள் வேறு பணிமனைகளுக்கு மாற்றப்பட உள்ளன.

இந்த நிலையில், புதிய மின்சார பேருந்துகள் ஜூன் 3-ந் தேதி முதல் சென்னையில் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளை டெண்டர் எடுத்துள்ள நிறுவனமே இயக்கவும், பராமரிக்கவும் உள்ளது. டிக்கெட் கொடுக்கும் பணியில் அரசு நடத்துநர்கள் பணியாற்றுவார்கள். புதிய மின்சார பேருந்தில் கட்டணமும் வழக்கம் போலவே இருக்கும் என்று மாநகர போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 120 மின்சார பேருந்து சேவைகளை சென்னையில் ஜூன் 3-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் 505 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று மாநகர போக்குவரத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து