முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹல்காம் சம்பவம்: டென்மார்க் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      இந்தியா
Balgam Attack-2025-04-24

Source: provided

டெல்லி : பஹல்காமில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து டென்மார்க் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் ராஸ்மஸ் அபில்ட்கார்ட் கிறிஸ்டென்சன் தெரிவித்ததாவது, இந்தியாவின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்திய அரசுக்கும் மக்களுக்கும் தனது அனுதாபத்தையும் இரங்கலையும் வெளிப்படுத்திய முதல் நாடுகளில் டென்மார்க்கும் ஒன்றாகும்.

பயங்கரவாதம் எங்கு நிகழ்த்தப்பட்டாலும், அதற்கு எதிராக டென்மார்க் இருப்பதை இந்திய அரசுக்கு நாங்கள் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளோம். ஐ.நா. அவையிலும் இதனைத் தெளிவுப்படுத்தியுள்ளோம். இந்தியாவுடன் மிகவும் வலுவான நட்புறவை டென்மார்க் கொண்டுள்ளது. 2021-ம் ஆண்டில் இருவரும் சேர்ந்து பசுமை கூட்டாண்மையை நிறுவினோம். தொழில்நுட்பத் துறையில், டென்மார்க் வழங்கும் பரந்த திறன்களையும் இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். பசுமை மாற்றம், எரிசக்தி, நீர், விவசாயம் மற்றும் அதனை எவ்வாறு நிலையானதாக மாற்றுவது என்பதில் எங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது, இந்தியா, ஏற்கெனவே அதிக முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து