முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை தாக்குதல்: பாக். பிரதமர் ஷெபாஸ் வேதனை

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      உலகம்
Pak 2024-02-14

Source: provided

இஸ்லமாபாத் : பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா  தாக்கிவிட்டதாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தியா மீது பாகிஸ்தான் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை இந்தியா, தனது வான் பாதுகாப்பு மூலமாக முறியடித்தது. பாகிஸ்தானின் விமான தளங்களையும் பிரமோஸ் ஏவுகணை மூலமாக இந்தியா தாக்கியது. இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என ஆரம்பத்தில் பூசிமெழுகிய பாகிஸ்தான், தற்போது மெல்ல மெல்ல உண்மையை ஒப்புக்கொள்ள தொடங்கியுள்ளது.

அந்த வகையில்தான், கடந்த 9, 10-ம் தேதி வாக்கில் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்திய ராணுவம், பாகிஸ்தானின் முக்கிய ராணுவம் தளங்களை தாக்கியது என பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது:-

இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். கடந்த 9, 10-ம் தேதி அதிகாலை தொழுகைக்கு பிறகு 4.30 மணி அளவில் தாக்குதல் நடத்தலாம் என எங்கள் ராணுவம் முடிவு செய்திருந்தது. ஆனால், அதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்கள் குறிவைக்கப்பட்டன. அதில் ராவல்பிண்டி விமான நிலையமும் அடங்கும்" என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து