முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுவை ஒழிக்க வேண்டும்: விஜயிடம் விருது பெற்ற மாணவியின் தாய் உருக்கம்

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      தமிழகம்
Vijay--1 2024-06-28

Source: provided

சென்னை : குடிகார கணவரால் எனது மகளின் படிப்பு வீணாகிவிட்டது. விஜயிடம் விருது பெற்ற மாணவியின் தாய் கண்ணீர் பேச்சு.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாணவ-மாணவிகளின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். மாநில அளவில் முதலிடம் பிடிப்பவர் மாணவராக இருந்தால் வைர மோதிரமும், மாணவியாக வைர கம்மலும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் மாணவ-மாணவிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா மற்றும் பரிசளிப்பு விழா பூஞ்சேரியில் உள்ள 4 பாயிஸ்ட் ஷெரட்டன் ஓட்டலில் உள்ள அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுவர், காஞ்சிபுரம், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை,பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 தொகுதிகளில் மாணவ-மாணவிகள் 600 பேர் பங்கேற்றனர்.

இந்தநிலையில்,விழாவில் பரிசு பெற்ற ஒரு மாணவியின் தாயார் விஜய்யிடம் குடிகார கணவரால் எனது மகளின் படிப்பு வீணாகிவிட்டது. அதையெல்லாம் தாண்டி இன்றைக்கு தனி ஆளாக போராடி என் மகளை சாதிக்க வைத்து இருக்கிறேன். மது முற்றிலுமாக ஒழிய வேண்டும் அண்ணா...என்று உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டே கூறினார். அவரை விஜய் தட்டிக்கொடுத்து தேற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து