முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கமல்ஹாசனுக்கு கண்டனம்

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      இந்தியா
Kamal 2024-01-12

Source: provided

பெங்களூரு : கன்னட மொழி குறித்த நடிகா் கமல்ஹாசனின் கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "அனைவரின் மதிப்பும் (புகழ்) எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. கமல் ஹாசன் ஒரு காலத்தில் பெரிய நடிகராகவும், ஹீரோவாகவும் இருந்தார். எல்லோரும் அவரை விரும்பினர். இப்போது அவர் ஒரு அரசியல்வாதியாகி விட்டார்.

எனவே, தனது மதிப்பை (அரசியல் ரீதியாக) அதிகரிக்கவும், விளம்பரத்திற்காகவும், இவ்வாறு அவர் பேசியுள்ளார். அவர் ஏற்கனவே கர்நாடகத்தில் பணியாற்றினார். அவர் இங்கே சாப்பிட்டு தண்ணீரும் குடித்திருக்கிறார். ஆனால் அதை அவர் மறந்துவிட்டார். அரசியல் மற்றும் விளம்பரத்திற்காகவே அவர் இப்படி பேசியுள்ளார்.

இது வேலை செய்யாது. ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் வேறுபட்டவை அல்ல. நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்கிறோம் என்றார். இதனிடையே கன்னட மொழி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மே 30 ஆம் தேதிக்குள் கமல்ஹாசன் பொது மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது 'தக் லைஃப்' படத்தை கர்நாடகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து