முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க.,வின் நிலை கண்டு மன உளைச்சல்: ஜி.கே.மணி வேதனை

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      தமிழகம்
Ramdos 2024-12-29

Source: provided

விழுப்புரம் : பா.ம.க.,வின் நிலை கண்டு மனவேதனையிலும் உளைச்சலிலும் இருக்கிறேன் என்று அக்கட்சியின் கவுரவ தலைவர் ஜி. கே. மணி கூறி உள்ளார்.

பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரின் மகனும், கட்சி தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது. அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமதாசின் குற்றச்சாட்டுகள் ஒரு பக்கம் இருக்கும் நிலையில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் அன்புமணி நேற்று முக்கிய ஆலோசனைக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் இந்த கூட்டத்தில் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பாமக சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் ஆகியோர் தைலாபுரத்தில் ராமதாசை சந்திக்க வந்திருந்தனர்.

அங்கு ஜி. கே. மணியிடம் நிருபர்களிடம் பா.ம.க.,வில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கேள்விகள் ஏழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது; எனக்கு என்ன சொல்வது என்று ஒன்றும் தெரியவில்லை. மன உளைச்சலாகவும், நெருக்கடியான சூழலாகவும் உள்ளது. பா.ம.க., ஒரு பலமான கட்சி. தனித்தன்மையுடன் இருக்கக்கூடிய கட்சி. கொள்கையோடும், லட்சியத்தோடும் இருக்கும் கட்சி. ஒரு நெருக்கடியான சூழலுக்கு உருவாகி உள்ளதால் வேதனைப்படுகிறோம், கஷ்டப்படுகிறோம்.  இது மறுபடியும் சீராக வேண்டும், மீண்டும் பழைய நிலைக்கு, குடும்ப பாசத்தோடு, வலிமையான கட்சியாக மாறவேண்டும். ஒரு பெரிய மாநாட்டை சந்தித்த கட்சி, தேர்தல் நேரத்தில் மிக வலிமையாக இருக்க வேண்டும். நாங்கள் தீவிரமாக முயற்சி பண்ணுகிறோம். அதற்காக தான் வந்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து