முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டுத் துறையில் தமிழகத்தின் சாதனைகளை பட்டியலிட்ட அரசு

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      தமிழகம்
Udayanidhi-1 2023-10-1

Source: provided

சென்னை : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு உலக அளவில் உயர்கிறது என தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை நிகழ்த்தியுள்ள முக்கிய சாதனைகள் விவரம்:

திராவிட மாடல் அரசு நடத்திய முக்கிய விளையாட்டுப் போட்டிகள்:

44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022:  114 கோடி ரூபாய்ச் செலவில் மாமல்லபுரத்தில் உலகப் புகழ் பெற்ற 44-வது செஸ் ஒலிம்யாட் போட்டி திராவிட மாடல் அரசினால் நடத்தப்பட்டது.  உலகின் 186 நாடுகளைச் சார்ந்த 1654 சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.  

 சென்னை பார்முலா- 4 கார் பந்தயம் 2024: துணை முதல்வர் உதயநிதி மிகுந்த கவனம் செலுத்தி  இந்தியாவிலேயே முதல்முதலாக இரவு நேர ஃபார்முலா-4 கார் பந்தயப் போட்டியை 2024 ஆகஸ்ட் மாதத்தில் சென்னை மாநகரில் நடத்தினார்.  

சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி-2022: சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, போட்டிகளில் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

ஸ்குவாஷ் உலகக் கோப்பை-2023:  உலகப் போட்டிகளில் ஒன்றாகிய சர்வதேச ஸ்குவாஷ் போட்டி 2023 சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது.

ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி -2023: திராவிட மாடல் அரசு வழங்கிய வழங்கிய 22.66 கோடி ரூபாய் நிதியுதவியுடன், 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் – 2023 போட்டி ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் உலகின் முதல் பாலி கிராஸ் பாரிஸ் ஈக்கோ டர்ப் செயற்கை இழையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2023:  6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி-2023 சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்புடன் நடத்தப்பட்டது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சார்ந்த 5,630 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.  

முதலமைச்சர் கோப்பை:  கடந்த 2023ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் ரூ. 50.86 கோடி செலவில் நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளில் 3 இலட்சத்து 76 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

4,617 விளையாட்டு வீரர்களுக்கு 152.52 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை: சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள 4,617 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  152 கோடியே 52 இலட்சம் ரூபாய் வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள்.  

இப்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் ஓய்வில்லா உழைப்பின் மூலம் தமிழ்நாட்டில் உருவாக்கி வரும் விளையாட்டு அரங்குகளால்- ஊக்கம் அளிக்கப்படும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளால் இந்திய விளையாட்டு உலகின் தலைமையிடமாக தமிழ்நாடு எழுச்சி பெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து