முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுநிலை நீட் தேர்வை ஒரே 'ஷிப்ட்டில்' நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

டெல்லி : முதுநிலை நீட் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், 2 ஷிப்ட்டுகளில், 2 வினாத்தாள்கள் அடிப்படையில் நடத்தப்படுவது தேர்வர்கள் இடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

2025-26ம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதனிடையே, 2025-26ம் கல்வியாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. கணினி மூலமாக நடைபெறும் இந்த தேர்வுகள் 2 ஷிப்ட்டுகளாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. காலை, மதியம் என இரு ஷிப்ட்டுகளாக தேர்வு நடைபெறும் எனவும், இரு தேர்வுகளுக்கும் வெவ்வேறு வினாக்கள் கேட்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதேவேளை, முதுநிலை நீட் தேர்வை 2 ஷிப்ட்டுகளாக நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதுகலை நீட் தேர்வை 2 ஷிப்ட்டுகளாக நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையின் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. 2 ஷிப்ட்டுகளில், 2 வினாத்தாள்கள் அடிப்படையில் நடத்தப்படுவது தேர்வர்களிடம் பாரபட்சத்தை ஏற்படுத்தும் என கூறி தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உத்தரவிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து