முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘நேரம் வந்து விட்டது மகளே’: ஹர்பஜன் மகளுக்கு விராட் கோலி நெகிழ்ச்சி பதில்

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      விளையாட்டு
Virat-Kohli 2023-10-02

Source: provided

மும்பை : தனது மகள் ஹினயா, விராட் கோலியிடம் மெசேஜ் செய்து ஏன் ஓய்வு பெற்றீர்கள் என்று கேட்டதை ஹர்பஜன் சிங்  பகிர்ந்துள்ளார். 

ஹர்பஜன் மகள் ஆதங்கம்...

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து   ஓய்வு அறிவித்து பலருக்கும் வருத்தமே. ஆனால் ஹர்பஜன் சிங்கின் மகள் ஹினயா, தன் ஆதங்கத்தை கோலியிடமே கேட்டு விட்டாள். இது விராட் கோலிக்கு மட்டற்ற நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஏன் விராட்?.... 

123 டெஸ்ட் போட்டிகளில் 9,230 ரன்கள் எடுத்து 10,000 கனவு ரன்களைக் கூட நிறைவேற்றிக் கொள்ளாமல் ஓய்வு பெற்று விட்டார். விராட் கோலி ஓய்வு பெற்ற பின் ஹர்பஜன் சிங் ‘ஏன் விராட் ஏன்?’ என்று ட்வீட் செய்தார். மேலும் தன் மகள் ஹினயாவும் தன்னிடம், ‘அப்பா ஏன் விராட் ஓய்வு பெற்றார்?’ என்று கேட்டதாக இன்ஸ்டண்ட் பாலிவுட்டில் தெரிவித்தார்.

நேரம் வந்து விட்டது...

மேலும் ஹினயா, விராட் கோலியிடமே மெசேஜ் செய்து ஏன் ஓய்வு பெற்றீர்கள் என்று கேட்டதையும் பகிர்ந்து கொண்டார் ஹர்பஜன் சிங். அதாவது விராட்டிற்கு தன் மெசேஜில் ஹினயா, “நான் ஹினயா, விராட் ஏன் ஓய்வு பெற்று விட்டீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். இதற்குப் பதில் அளித்த விராட் கோலி, ‘நேரம் வந்து விட்டது மகளே’ என்று பதில் அளித்துள்ளார். ஹர்பஜன் சிங் மகள் தனக்கு மெசேஜ் செய்து விசாரித்ததில் விராட் கோலி மட்டற்ற மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்துள்ளார்.

மூன்று வடிவங்களிலும்... 

மிக நீண்ட காலம் வரையில் மூன்று வடிவங்களிலும் 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்திருந்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்த விராட் கோலி, கடைசியில் டெஸ்ட் ஃபார்மில் சரிவு காண சராசரி 46.85 என்று சரிவு கண்டது. 30 சதங்களும் 31 அரைசதங்களும் இவரது டெஸ்ட் கன்வர்ஷன் ரேட்டின் துரித கதியைப் பறைசாற்றுகிறது.

வீழ்த்த முடியா வீரர்...

68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்சி செய்த விராட் கோலி 40 டெஸ்ட்களில் வென்று நம்பர் 1 டெஸ்ட் கேப்டனாகத் திகழ்ந்தார். ஐ.பி.எல். தொடர்களிலும் விராட் கோலி ஒரு அசைக்க முடியா, வீழ்த்த முடியா வீரராக இன்று வரை ஜொலித்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து