முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்போக பாசனத்துக்காக முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2025      தமிழகம்
Mullai 2025-06-01

Source: provided

குமுளி : கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக பாசனத்துக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் நேற்று (ஜூன் 1) தண்ணீரை திறந்து வைத்தார்.

முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இரு போக சாகுபடி நடைபெற்று வருகிறது. முதல் போகத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு போதிய மழையின்றி நீர்மட்டமும் குறைந்தது. இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கியது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டமும் 130.50 அடியாக உயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. தேக்கடி வனச் சோதனைச் சாவடி அருகே உள்ள சுரங்க வாய்க்கால் மதகில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி ஆட்சியர் ரஞ்ஜத் சிங் தலைமை வகித்து மதகை திறந்து பாசனத்துக்காக நீரை வெளியேற்றினார். உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது, பெரியாறு அணை சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சி.செல்வம், வட்டாட்சியர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் குமார் மற்றும் விவசாயிகள் முன்னிலை வகித்தனர்.

பாசனத்துக்காக விநாடிக்கு 200 கனஅடிநீரும், தேனி மாவட்ட குடிநீர் திட்டங்களுக்காக 100 கனஅடி என்று மொத்தம் 300 கனஅடிநீர் திறக்கப் பட்டது. 120 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து