முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் கனமழை: பொதுமக்களை நேரில் சந்தித்து முதல்வர் பிஸ்வா சர்மா ஆறுதல்

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      இந்தியா
Assam-CM-2025-06-02

குவகாத்தி, அசாமில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் 15 மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் பேர் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 29-ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமாக உள்ள நிலையில், மேலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அசாமில் இன்றும் வெள்ள நிலைமை மோசமாகவே உள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாஹாட்டியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய வானிலை ஆய்வு மையம், அசாமின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா எச்சரித்தார். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற ஹிமந்த பிஸ்வா சர்மா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து