முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு காபிக்கு அழைத்து பாக். உடனான பிரச்சினையை தீர்த்துவிட முடியாது: கனிமொழி எம்.பி. பேச்சு

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      உலகம்
Kanimozhi-2025-06-02

மாட்ரிட், பாகிஸ்தானை ஒரு காபிக்கு அழைத்து மோதல்களை முடித்து வைத்து, பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற தவறான கருத்துக்களைக் கொண்ட நாடுகளையும் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த அந்நாட்டு பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கலந்துகொண்ட கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பிக்கள் குழு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து பாகிஸ்தானுடனான மோதல்களைத் தீர்ப்பதில் உள்ள சிக்கலான தன்மையை தி.மு.க. எம்.பி கனிமொழி பேசினார். அவர், "இந்திய அரசு தூதுக்குழுக்களை அனுப்பியுள்ளது. மேலும், நட்பு நாடுகள் மற்றும் பல்வேறு நாடுகளுடன் பேசுவதன் மூலமும், பாகிஸ்தானை ஒரு காபிக்கு அழைத்து இந்த மோதல்களை முடித்து வைத்து பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற தவறான கருத்துக்களைக் கொண்ட நாடுகளையும் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். பாகிஸ்தான் விவகாரம் பலரின் கண்ணுக்குத் தெரிவதை விட அதிகம்" என்றார். அவரின் இந்த கருத்துகள் பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுகின்றன.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவை உலகுக்கு அம்பலப்படுத்தவும், 'ஆபரேஷன் சிந்தூர்' போன்ற இந்தியாவின் தற்காப்பு உரிமையை எடுத்துரைக்கவும் சர்வதேச நாடுகளுக்கு இந்திய பிரதிநிதிகள் சென்றுள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து