முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 ஆண்டுகளில் முதன்முறையாக கனடா ஜி-7 மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் நரேந்திரமோடி திடீர் முடிவு?

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      இந்தியா
Modi 2024-12-04

புதுடில்லி, ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்காமல் புறக்கணிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவில், ஜி7 மாநாடு ஜூன் 15 - 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பாக, கனடா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அழைப்பு வராத நிலையில், வட அமெரிக்க நாடுகளுக்குப் பயணிக்கும் திட்டம் பிரதமர் நரேந்திர மோடிக்கு இல்லை என்றே கூறப்படுகிறது.

கனடாவில் தற்போது புதிய அரசு அமைந்திருந்தாலும், அங்குள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்துமா என்பது தெரிய வராத நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. கனடா நாட்டுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்ளும்போது, அதனை சீர்குலைக்கும் வகையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் முயற்சிக்கலாம், அது பிரதமர் மோடி - கனடா புதிய பிரதமர் மார்க் கார்னி இடையேயான உறவு வலுப்படுவதைக் கெடுக்கலாம் என்றும் கருதுவதால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜி7 என்பது கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நாடுகளுக்கு இடையிலான அரசியல், பொருளாதாரம், வா்த்தகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களை விவாதிக்கும் மன்றமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து