முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேச புதிய கரன்சியில் முஜிபுர் ரகுமான் படம் நீக்கம்

திங்கட்கிழமை, 2 ஜூன் 2025      உலகம்
Bangladesh 2025-06-02

Source: provided

டாகா : வங்கதேசம் வெளியிட்டுள்ள புதிய கரன்சி நோட்டுகளில் அந்நாட்டின் தேசத் தந்தை முஜிபுர் ரகுமான் படம் நீக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் வழக்கமாக அந்நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான் படம் இடம் பெற்றிருக்கும். இவரது மகள் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வங்கதேச சுதந்திரத்தின் போது உயிரிழந்த ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால், அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். தற்போது அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சி நடைபெறுகிறது.

வங்கதேசம் 3 புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. அதில் முஜிபுர் ரகுமான் படம் இடம்பெறவில்லை. இது குறித்து வங்கதேச வங்கியின் செய்தி தொடர்பாளர் ஆரிப் உசைன் கான் கூறுகையில், ‘‘ புதிய கரன்சி நோட்டுகளில் எந்த மனித உருவத்தின் படமும் இடம்பெறவில்லை. அவற்றுக்கு பதில் இயற்கை காட்சிகள், வங்கதேசத்தின் பாரம்பரிய அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன என்றார்.

வங்கதேசம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடு என்றாலும், அந்நாட்டின் புதிய கரன்சியில் இந்து, புத்தமத கோயில்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க அரண்மனைகளின் படங்கள் இடம் பெற்றுள்ளன. இங்கிலாந்து ஆட்சியில் இருந்துபோது வங்கதேசத்தில் ஏற்பட்ட பஞ்சம் குறித்து மறைந்த ஓவியர் ஜெய்னுல் அபேதின் வரைந்த ஓவியமும் அதில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரபோரில், உயிரிழந்த வங்கதேச தியாகிகள் நினைவிடமும் இடம் பெற்றுள்ளது. வங்கதேசத்தில் புதிய கரன்சி நோட்டுக்கள் வெளியிடபட்டாலும், பழைய கரன்சி நோட்டுக்களும் புழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து