முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2025      தமிழகம்
Kurdalam 2023 06 20

Source: provided

தென்காசி : தென்காசியில் மழை குறைந்து நீர்வரத்து சீராக இருந்ததால் ஒரு வாரத்துக்கு பின்னர் நேற்று (ஜூன் 1) முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை முதல் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக மழை தீவிரம் அடைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழையும், பிற பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழையும் பெய்தது. தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மழையின் தீவிரம் குறைந்தது.

நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், நாலுமுக்கு பகுதியில் 16 மி.மீ., ஊத்து பகுதியில் 12 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 9.40 மி.மீ., காக்காச்சி பகுதியில் 7 மி.மீ., மாஞ்சோலையில் 4 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 2 மி.மீ., பாபநாசம், நாங்குநேரியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.

கனமழை எச்சரிக்கை காரணமாக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஒரு வாரமாக தொடர் மழை பெய்ததால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்தது. இந்நிலையில், மழை குறைந்து நீர்வரத்து சீராக இருந்ததால் ஒரு வாரத்துக்கு பின்னர் நேற்று முதல் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து