முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க.வின் நிலைப்பாடு தேர்தலை ஒட்டி அறிவிக்கப்படும்: பிரேமலதா

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2025      தமிழகம்
Premalatha 2024-02-17

Source: provided

சென்னை : தே.மு.தி.க.வின் பயணமும் தேர்தலை ஒட்டியே இருக்கும்" என்று  அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

2026 மாநிலங்களவைத் தேர்தலில்தான் தே.மு.தி.க.வுக்கு சீட் என அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் நேற்று (ஜூன் 1) தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு சீட் வழங்கப்படும் என அ.தி.மு.க. தரப்பில் ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது அடுத்த தேர்தலில் சீட் எனக் கூறுகின்றனர். அரசியலில் தேர்தலை நோக்கிதான் அனைத்து பயணமும் இருக்கும் என்பதால் எங்களின் நிலைப்பாடும் அதை நோக்கிதான் இருக்கும். தேர்தலை மனதில் வைத்தே தே.மு.தி.க. பயணிக்கிறது. 2026 தேர்தலில் தே.மு.தி.க. தனது கடமையை நிறைவேற்றும். இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கும்படி கோரி எல்.கே. சுதீஷ் சனிக்கிழமை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருந்தார். இந்த நிலையில் அடுத்த மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு சீட் வழங்கப்படும் எனவும், தே.மு.தி.க. கூட்டணியில் தொடர்வதாகவும் அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், அ.தி.மு.க.வின் நிலைபாடு குறித்தி அதிருப்தியை வெளிப்படுத்திய பிரேமலதா, கூட்டணியில் தொடர்வது குறித்து உறுதியாக எதுவும் தெரிவிக்கவில்லை.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து