முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வில் இரண்டு புதிய அணிகள்: மதுரை பொதுக்குழுவில் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2025      தமிழகம்
Madurai-Dmk-2025-05-31

Source: provided

சென்னை : தி.மு.க.வில் மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர் அணி என இரண்டு புதிய அணிகள் உருவாக்கப்படுவதாக தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நேற்று (ஜூன் 1) நடைபெற்று வருகிறது. மதுரையில் 48 ஆண்டுக்கு முன்பு தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தற்போது நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மதுரையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூடவே, உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஒரு சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கென புதிய சார்பு அணி மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை கொண்ட கல்வியாளர் அணி தி.மு.கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக உள்ள அணிகளின் எண்ணிக்கை 23-ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து