முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு: மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி: தே.மு.தி.க.வுக்கு 2026-ல் சீட் என உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2025      தமிழகம்
ADMK 2025-06-01

Source: provided

சென்னை : மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும், கூட்டணியில் தொடரும் தேமுதிகவுக்கு 2026-ல் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்றும் அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

இதனை, நேற்று (ஜூன்.1) செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாக அறிவித்தனர். 

தமிழகம் சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, பி.வில்சன், எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, அன்புமணி ராமதாஸ், என்.சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தொடரும். 2026-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலின்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜூன் 19-ல் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ம.தனபால், அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை போட்டியிடுவார்கள்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து