முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.-தே.மு.தி.க. உறவை உடைக்கும் முயற்சி நடக்காது : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2025      தமிழகம்
EPS 2024-08-27

Source: provided

 சென்னை : அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே சுமூகமான உறவு உள்ளது. அதனை உடைக்க வேண்டும் என முயற்சிக்க வேண்டாம், அது நடக்காது என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் இ..பி.எஸ். தெரிவித்துள்ளார்.

நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தி.மு.க., தீர்மானத்தில் துரோக அ.தி.மு.க., எனக்கூறியுள்ளனர். துரோகம் செய்தது நாங்கள் இல்லை. மத்தியில் தி.மு.க., 16 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அப்போது ஏன் கல்விக் கொள்கையில் ஏன் கவனம் செலுத்தவில்லை. அப்போதே கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்து இருக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது மக்கள் பற்றி கவலையில்லை. மாணவர்கள் பற்றி கவலையில்லை. 

மதுரையில், பந்தல்குடி கால்வாயை மறைத்தது மோசமான ஆட்சி என்பதற்கு சான்று. அவர்களுக்கே கால்வாயை பிடிக்கவில்லை. இதனால் முதல்வர் வரும் போது திரைபோட்டு மறைத்தனர்.  ஆதவ் அர்ஜூனா பேசியது தொடர்பாக த.வெ.க., தலைவர் விஜய் என்னுடன் பேசவில்லை. ஆதவ் அர்ஜூனா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே சுமூகமான உறவு உள்ளது. அதனை உடைக்க வேண்டும் என முயற்சிக்க வேண்டாம். அது நடக்காது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து