முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு மக்களுக்கு பாறை போன்று மோடி அரசு துணை நிற்கும்: அமித்ஷா

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2025      இந்தியா
Amit-Shah  2024-03-10

Source: provided

கொல்கத்தா : வடகிழக்கு மாநில மக்களுக்கு ஒரு பாறை போன்று மோடி அரசு துணையாக நிற்கும் என்று அமித்ஷா பதிவிட்டு உள்ளார்.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்படி அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் வெள்ளம் வழிந்தோடுகிறது. பிரம்மபுத்திரா ஆற்றிலும் நீர் வரத்து அதிகரித்து, அதன் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இந்த மாநிலங்களில் கனமழை, வெள்ளம் ஆகியவற்றால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு இவற்றின் தொடர்ச்சியால் 12 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கொல்கத்தா நகரில் நிகழ்ச்சி ஒன்றில் இன்று பங்கேற்றார். இதன்பின்னர் அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், தொடர் கனமழை பெய்து வரும் சூழலில் அசாம், சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் மணிப்பூர் கவர்னரை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்.

எந்தவொரு கடினம் வாய்ந்த சூழலையும் எதிர்கொள்வதற்கு சாத்தியப்பட்ட எல்லா உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என உறுதியளித்தேன். வடகிழக்கு மாநில மக்களுக்கு ஒரு பாறை போன்று மோடி அரசு துணையாக நிற்கும் என்று அவர் பதிவிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து