முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டில்லியில் கடுமையான வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      தமிழகம்
sun-2023-05-01

Source: provided

புதுடில்லி: தலைநகர் டில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் கோடைவெய்யில் கொளுத்திவருகின்றது. ஆனால் தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோடை வெப்பத்தின் பிடியிலிருந்து இந்த மாநிலங்கள் தப்பித்துள்ளது.

 தலைநகர் டில்லியில் கடும் வெய்யில் வெளுத்தி வருகின்றது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

டில்லியின் என்.சி.ஆர். பகுதியில் நேற்று காலை 10 மணி வரை சுமார் 36 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது. இதனால் தேசிய தலைநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான வெப்பத்திற்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தொடர்ந்து, இந்த வெப்பநிலையானது படிப்படியாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிவப்பு எச்சரிக்கையை அடுத்து, குடியிருப்பாளர்கள் நீர் ஆகாரம் அதிகம் எடுத்துக்கொள்ளவும், நேரடியாகச் சூரிய ஒளி படும் உச்ச வெப்ப நேரங்களில் கூடுமானவரை வெளியில் வருவதைத் தவிர்க்கலாம். மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து