முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      தமிழகம்
Mettur Dam 2023-06-02

Source: provided

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 6,339 கன அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி 100 அடியாக உயர்ந்தது. அதன் பிறகு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டாலும், தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்குக் கீழே குறையாமல் இருந்து வருகிறது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக புதன்கிழமை காலை அணைக்கு வினாடிக்கு 5,146 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6,339 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 114.62 அடியிலிருந்து 114.91 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 85.58 டிஎம்சியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து