Idhayam Matrimony

ஓ.பி.எஸ். மீது நடவடிக்கையா? - சபாநாயகர் அப்பாவு விளக்கம்

திங்கட்கிழமை, 16 ஜூன் 2025      தமிழகம்
Appavu--1

Source: provided

திருநெல்வேலி : ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அளிக்கப்பட்டுள்ள மனு மீது உரிய ஆய்வுக்குப் பின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

அ.தி.மு.க. சின்னத்தை எதிர்த்து கடந்த 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து தேனியை சேர்ந்த மிலானி என்பவர் சட்டப் பேரவை தலைவரிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், ஓ.பி.எஸ்.ஸின் எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டும் என்று மிலானி என்பவர் அளித்துள்ள மனு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு அளித்த பதிலில், “ஓ.பி.எஸ். மீது அ.தி.மு.க. கொறடாவோ, அ.தி.மு.க. நிர்வாகிகளோ இதுவரை புகார் அளிக்கவில்லை. தொகுதியை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். இதுபோன்ற விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 10-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உரிய ஆய்வு செய்து பேரவை விதிப்படியும், சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து