முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: வாசிம் அக்ரமின் வாழ்நாள் சாதனையை தகர்த்த பும்ரா

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      விளையாட்டு
Bumra 2023 08 18

Source: provided

லீட்ஸ் : டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா 'சேனா' நாடுகளில் (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) மட்டும் 148 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் 'சேனா' நாடுகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

ஐந்து போட்டிகள்.... 

இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

471 ரன்கள் குவிப்பு...

அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (101 ரன்கள்), கில் (147 ரன்கள்) மற்றும் ரிஷப் பண்ட் (134 ரன்கள்) சதம் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டாங்கு தலா 4 விக்கெட் சாய்த்தனர்.

209 ரன்கள் எடுத்தது..

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. ஆலி போப் 100 ரன்களுடனும் (131 பந்து, 13 பவுண்டரி), ஹாரி புரூக் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் பும்ரா மட்டுமே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

148 விக்கெட்டுகள்... 

டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா 'சேனா' நாடுகளில் (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) மட்டும் 148 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் 'சேனா' நாடுகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வீரரான வாசிம் அக்ரம் 146 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ள பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.

ஜோ ரூட்டை அவுட்... 

மேலும்  ஜோ ரூட்டை அதிகமுறை அவுட் செய்த வீரர்கள் பட்டியலில், ஹசில்வுட் சாதனையை (2வது இடம்) பும்ரா சமன் செய்தார். முன்னதாக ஜோ ரூட் 28 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட்டை அதிகமுறை அவுட் செய்த வீரர்கள் பட்டியலில், ஹசில்வுட் சாதனையை (2வது இடம்) சமன் செய்த பும்ரா சமன் செய்தார். ரூட்டை அதிகமுறை விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கம்மின்ஸ் (11 முறை) வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

அதிக விக்கெட்கள் பட்டியல்:

1. ஜஸ்பிரித் பும்ரா - 148 விக்கெட்டுகள்.

2. வாசிம் அக்ரம் - 146 விக்கெட்டுகள்.

3. அனில் கும்ப்ளே - 141 விக்கெட்டுகள்.

4. இஷாந்த் சர்மா - 130 விக்கெட்டுகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து