முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது: திருச்செந்தூர் திருக்கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

புதன்கிழமை, 25 ஜூன் 2025      ஆன்மிகம்
Thiruchendur-Temple

திருச்செந்தூர், 15 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ள திருச்செந்தூர் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50க்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான யாகசாலை குண்டங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருகிற 1-ந்தேதி யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது.

அதற்கு முன்பாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த மெகா திட்ட வளாக பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதன்படி கோவில் முன்பு சண்முக விலாசத்தில் இருந்து ஏற்றம் காணும் இடங்களில் தரையில் கல் பதிக்கும் வேலை நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. அதே போல் கடற்கரையில் மேடு, பள்ளங்கள் அகற்றப்பட்டு சமப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கும்பாபிஷேக பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். கலெக்டர் இளம்பகவத் பல்வேறு மார்க்கங்களில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவல்துறை உயர் அதிகாரிகள், பக்தர்கள் பாதுகாப்பு குறித்து அடிக்கடி கோவில் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து