முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோரிக்கை வைத்த உடனே அரசு பணி: முதல்வர் ஸ்டாலினுக்கு கூலி தொழிலாளி நன்றி

புதன்கிழமை, 25 ஜூன் 2025      தமிழகம்
CM 2024-12-02 (2)

Source: provided

வேலூர் : கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே கூலி தொழிலாளிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு பணி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கூலி தொழிலாளி நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது, காட்பாடி வட்டம் சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி என்பவர் முதல்வர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் ஆதரவற்ற நிலையில் வறுமை சூழ்நிலையில் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பொற்செல்வி வழங்கிய கோரிக்கை மனுவில் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், தன்னுடைய மாமனார் ஒரு மாற்றுத்திறனாளி என்பதாலும் அவர்கள் அனைவரையும், தான் கூலி வேலை செய்து காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்து தனக்கு ஏதேனும் ஒரு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று கோரி விண்ணப்பம் மனு அளித்தார்.

பொற்செல்வியின் ஏழ்மை நிலையை பரிவோடு கருதி, அவரது மனுவை உடனடியாக ஏற்றுக்கொண்டு, முதல்-அமைச்சர் பொற்செல்விக்கு ரூபாய் 17,000 மாத சம்பளத்தில் காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தின் விடுதி காவலருக்கான பணி நியமன ஆணையை அவரிடம் வழங்கினார்.

முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்த சில மணி நேரங்களில், பணி நியமன ஆணை கிடைத்ததால், அதனை பெற்றுக் கொண்ட பொற்செல்வி அளவில்லாத மகிழ்ச்சியோடு, முதல்வர் மு.க. ஸ்டாலினை வணங்கி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் 21,776 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் அடையாளமாக 12 பேருக்கு பட்டாக்களை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து