முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் கட்டண உயர்வை கைவிட எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

புதன்கிழமை, 25 ஜூன் 2025      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : ரயில் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. உடனடியாக ரயில் கட்டண உயர்வை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டம், காட்பாடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு பொம்மை முதல்வர் ஸ்டாலின் சென்றபோது, அங்குள்ள பயணிகளின் முகத்தில் வழக்கமான உற்சாகமும், மகிழ்ச்சியும் குறைந்திருந்தது என்றும், ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும், குறைந்து வரும் சாதாரண வகுப்பு பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியை களவாடியிருக்கிறது என்றும், ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல், சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் என்று பிரதமரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து