முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரஜ் சோப்ரா சாம்பியன்

புதன்கிழமை, 25 ஜூன் 2025      விளையாட்டு
Neeraj-Chopra 2023 08 19

Source: provided

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார். இந்த போட்டியில் முதல் மற்றும் கடைசி முயற்சிகள் புள்ளிகள் எடுக்காத நீரஜ் சோப்ரா, இடைப்பட்ட முயற்சிகளில் 83.45, 85.29, 82.17, 81.01 மீட்டருக்கு ஈட்டி எறிந்து அசத்தினார். அதில் மூன்றாவது முயற்சியில் 85.29 மீட்டருக்கு ஈட்டி எறிந்ததன் மூலம் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.

தென் ஆப்பிரிக்காவின் ஸ்மித் 84.12 மீட்டர் தூரமும் கிரெனடா நாட்டை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 83.63 மீட்டர் தூரமும் ஈட்டி எறிந்து முறையே 2 மற்றும் 3 ஆம் இடங்களை பிடித்தனர். முன்னதாக கடந்த வாரம் பாரிசில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடல் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

___________________________________________________________________________________

வெற்றிக்கு காரணம்: ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது,இந்த மைதானத்தில் பேட்டிங்குக்கும் சரி, பந்து வீச்சுக்கும் சரி நல்ல சாதகம் இருந்ததனால் சிறப்பாக செயல்பட முடிந்தது. 4-வது இன்னிங்சில் இலக்கை நோக்கி செல்வது நிச்சயம் அழுத்தமான ஒரு வியசம்தான். ஆனாலும் எங்களது அணியின் துவக்க வீரர்களான ஜேக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்து சேசிங்கிற்கு நல்ல அடித்தளத்தை அமைத்தனர். 

அவர்களது பார்ட்னர்ஷிப் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. பந்துவீச்சிலும் எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆனால் இந்த வெற்றிக்கு மேலும் ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், இரண்டு இன்னிங்சிலும் இந்திய அணியின் கடைநிலை வீரர்களை மிக விரைவாக வீழ்த்தியதான் நாங்கள் அவர்களை சேசிங் செய்வதற்கு வசதியாக இருந்தது. இந்த தொடரினை வெற்றியுடன் துவங்கியதில் மகிழ்ச்சி. இன்னும் அடுத்த நான்கு போட்டிகளிலும் இதேபோன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். என பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

___________________________________________________________________________________

மனம் திறந்த ஈஷா குப்தா

பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையான ஈஷா குப்தா கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் காதலில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தது. இது குறித்து நடிகை ஈஷா குப்தா அளித்த பேட்டியில், "2018-ம் ஆண்டு ஒரு விருந்து நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்தோம். பின்னர் நாங்கள் 2 மாதங்களாக பழகிக் கொண்டு இருந்தோம். ஆனால் டேட்டிங் செய்யவில்லை. நாங்கள் டேட்டிங் கட்டத்தை அடைவதற்கு முன்பே உறவு முடிந்து விட்டது. எனவே அது டேட்டிங் அல்ல. நாங்கள் போதுமான இணக்கத்தில் இல்லை என்பதை உணர்ந்தோம். இதையடுத்து அவர் என்னுடையவர் அல்ல என்பதை நான் உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஹர்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான் கோவிக்கை கடந்த 2020-ம் ஆண்டு காதல் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் இருக்கிறார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து