முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லீட்ஸ் முதல் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி

புதன்கிழமை, 25 ஜூன் 2025      விளையாட்டு
Eng 2024-03-26

Source: provided

லீடஸ் : இந்திய அணிக்கு எதிரான லீட்ஸ் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது.

364 ரன்கள் குவிப்பு... 

முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து பேட்டிங் செய்து நான்காம் நாள் ஆட்டம் முடிவில் 21 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்தது. கடைசி நாள் ஆட்டத்தில், 188 ரன்கள் சேர்த்த பிறகே முதல் விக்கெட்டை இங்கிலாந்து இழந்தது. 

ஒன்றுக்கு பூஜ்ஜியம்... 

இரண்டாவது இன்னிங்சில் பென் டக்கெட் 149 ரன்கள் குவித்தார். தொடக்கவீரர் சாக் க்ராலி 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் விழுந்தன. ஜோ ரூட் நிலைத்து நின்று அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு அச்சாரம் இட்டார். இறுதியில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்களை குவித்து இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இழந்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து