முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வியாழக்கிழமை, 10 ஜூலை 2025      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, நெல்லையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், மாறாந்தை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், ராமலெட்சுமி தம்பதியரின் மகன் சேர்மதுரை (வயது 12) என்பவர் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், பெருங்குடி பகுதி-1 கிராமம், வடக்கன்குளம் சி.எம்.எஸ். குழந்தைகள் இல்லத்தில் தங்கி அருகிலுள்ள கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில் கடந்த 8.7.2025 அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் சி.எம்.எஸ். குழந்தைகள் இல்ல வளாகத்தில் பயன்பாட்டில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது பெற்றோருக்கு 3 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து