முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      தமிழகம்
Eps 2024-12-13

Source: provided

சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்​சார சுற்​றுப்​பயணத்தின்  2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  

இது குறித்து அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ கழகப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி மு. பழனிசாமி, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற லட்சியத்தோடு, 24.7.2025 முதல் 8.8.2025 வரை இரண்டாம் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வாறு, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக, தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டஙளில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

அதன்படி, 24.07.2025 – புதுக்கோட்டை வடக்கு கந்தர்வகோட்டை ஆலங்குடி புதுக்கோட்டை தெற்கு அறந்தாங்கி

25.07.2025 – புதுக்கோட்டை வடக்கு விராலிமலை புதுக்கோட்டை புதுக்கோட்டை தெற்கு திருமயம்

26.07.2025 – சிவகங்கை காரைக்குடி

30.07.2025 – சிவகங்கை மானாமதுரை ராமநாதபுரம் பரமக்குடி திருவாடாணை ( சு.ளு. மங்கலம் )

31.07.2025 – ராமநாதபுரம் ராமநாதபுரம் முதுகுளத்தூர் தூத்துக்குடி வடக்கு விளாத்திகுளம்

1.08.2025 – தூத்துக்குடி வடக்கு கோவில்பட்டி ஓட்டப்பிடாரம் தூத்துக்கடி தெற்கு தூத்துக்குடி

2.08.2025 – தூத்துக்குடி தெற்கு திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் திருநெல்வேலி புறநகர் ராதாபுரம் (வள்ளியூர்)

4.08.2025 – திருநெல்வேலி மாநகர் திருநெல்வேலி பாளையங்கோட்டை திருநெல்வேலி புறநகர் நாங்குநேரி

5.08.2025 – திருநெல்வேலி புறநகர் அம்பாசமுத்திரம் தென்காசி தெற்கு ஆலங்குளம் தென்காசி

6.08.2025 – தென்காசி வடக்கு கடையநல்லூர் வாசுதேவநல்லூர் (புளியங்குடி) சங்கரன்கோவில்

7.08.2025 – விருதுநகர் மேற்கு ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசியில் பயணம் செய்கிறார்.

அவரது பயணத்திற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து