முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதி யஷ்வந்த் பதவி நீக்கத்துக்கு அனைத்துக்கட்சிகளும் ஆதரவு : மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தகவல்

சனிக்கிழமை, 19 ஜூலை 2025      இந்தியா
Kiran-Rijiju 2023-01-16

Source: provided

புதுடில்லி : ''பண மூட்டை பிரச்னையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கின்றன'' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.

 இது குறித்து கிரண் ரிஜ்ஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  பண மூட்டை பிரச்னையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் அவர் மீதான பதவி நீக்க தீர்மானத்திற்கு முழு ஆதரவு அளிக்கின்றனர். நீதித்துறை ஊழல் ஒரு தீவிரமான மற்றும் மிக முக்கிய பிரச்னை. நீதிபதி வர்மாவை நீக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் முழு முயற்சி உடன் இருக்கிறது.

நீதித்துறையில்தான் மக்களுக்கு நீதி கிடைக்கும். நீதித்துறையில் ஊழல் இருந்தால், அது அனைவருக்கும் ஒரு தீவிர கவலை. அதனால்தான் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தினோம். எந்தவொரு கட்சியும் ஊழல் நிறைந்த நீதிபதிக்கு ஆதரவாகவோ அல்லது ஊழல் நிறைந்த நீதிபதியைப் பாதுகாப்பதாகவோ தெரியவில்லை.

அவர்கள் இந்த விஷயங்களை எப்படி கையாள வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீதித்துறையில் ஊழல் என்று வரும் போது, நாம் ஒன்றாக நிற்க வேண்டும். எந்தவொரு பாரபட்சமான மனப்பான்மையும் இருக்க முடியாது, அதை ஒரு அரசியல் பிரச்னையாக மாற்றக் கூடாது. இந்த பிரச்னையில் ஒற்றுமை மிகவும் அவசியம். இவ்வாறு கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து