Idhayam Matrimony

எழுச்சிப் பயணம் மக்களின் ஆதரவோடு வெற்றிகர பயணம்: 10 சதவீத வாக்குறுதிகளை கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை : எடப்பாடி பழனிசாமி அறிக்கை

திங்கட்கிழமை, 28 ஜூலை 2025      தமிழகம்
EPS 2020 11-16

Source: provided

சென்னை : தி.மு.க. கூறிய 525 தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்கிற எனது எழுச்சிப் பயணம் உங்களின் பேராதரவோடு வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.  எனது எழுச்சிப் பயணத்தை ஜூலை 7-ந்தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, ஜூலை 25-ந்தேதியில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி வரை நிறைவு செய்திருக்கிறேன்.

10 மாவட்டங்களில், 46 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்திருக்கிறேன். அவர்களைப் பார்த்து, அவர்களின் குறைகளைக் கேட்டு, அவர்களின் மனநிலையை அறிந்தேன். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் என்னை ஆர்வமுடன் சந்தித்த  அனைவருமே, மக்கள் விரோத ஆட்சியில், அவர்கள் சந்தித்து வரும் வேதனைகளை எடுத்துரைத்தனர். 

தி.மு.க. கூறிய 525 தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 98 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டோம் என்று பச்சைப் பொய் சொல்லி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறது இந்த மக்கள்  அரசு. தனிநபர் வருமானத்தில் தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது, அ.தி.மு.க. ஆட்சியின் தொடர்ச்சியே தவிர, ஸ்டாலின் அரசின் சாதனையல்ல.   வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். வானளாவிய வெற்றிபெற்ற எனது எழுச்சிப் பயணம் தொடரும்.  

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து