முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலிடத்தை இழந்தார் மந்தனா

புதன்கிழமை, 30 ஜூலை 2025      விளையாட்டு
Smriti-Mandhana 2024-08-21

Source: provided

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் பிந்தங்கி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட்டும் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

 

இங்கிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 10 இடங்கள் முன்னேறி 11ஆம் இடத்திற்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் இரண்டு இடங்கள் முன்னேறி 13-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் இன்றி இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் இரண்டாம் இடத்தையும், மேகன் ஷட் 3-ம் இடத்திலும், இந்திய அணியின் தீப்தி சர்மா நான்காம் இடதையும் தக்கவைத்துள்ளனர். 

__________________________________________________________________________________________________

தரவரிசை: அபிஷேக் முதலிடம் 

ஐசிசி டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். டி20 தரவரிசையில் நான்காவது இந்தியராக இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். பஞ்சாபில் அமிர்தசரஸைச் சேர்ந்த அபிஷேக் சர்மா (24 வயது) இந்திய டி20 அணியில் 2024இல் அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக 17 போட்டிகளில் 535 ரன்கள் எடுத்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 33.43ஆக இருக்க, ஸ்டிரைக் ரேட் 193.84ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார். பின்னர், ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். பிறகு, எப்படி முதலிடம் பிடித்தார் தெரியுமா? டிராவிஸ் ஹெட் புள்ளிகள் குறைந்ததால் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை வருமாறு., 1. அபிஷேக் சர்மா - 829 புள்ளிகள் (இந்தியா), 2. டிராவிஸ் ஹெட் - 814 புள்ளிகள் (ஆஸி.), 3. திலக் வர்மா - 804 புள்ளிகள் (இந்தியா), 4. பிலிப் சால்ட் - 791 புள்ளிகள் (இங்கிலாந்து), 5. ஜாஸ் பட்லர் - 772 புள்ளிகள் (இங்கிலாந்து).

__________________________________________________________________________________________________

புதிய பயிற்சியாளராக அருண்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த பரத் அருண், 2022 ஆம் ஆண்டில் இருந்து நிகழாண்டு வரை சிறப்பாக பணியாற்றினார். இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த பரத் அருணின் தலைமையின் கீழ், கொல்கத்தா அணி 2022 ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது.

சஞ்சீவ் கோயங்காவின் லக்னோ அணிக்கு 62 வயதான பரத் அருண், 2 ஆண்டுகள் பந்துவீச்சு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணியில் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தொடர்ந்து செயல்படுவாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், பரத் அருண் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

__________________________________________________________________________________________________

இந்தியா-பாக்., போட்டி நடக்குமா..?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி லீக் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்து அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

அவ்வகையில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. 2-வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. முன்னதாக இந்த தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் அப்போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் மறுத்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆகவே அரையிறுதியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து