முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-வது டெஸ்ட் போட்டி: பென்ஸ்டோக்ஸ் திடீர் விலகல்

புதன்கிழமை, 30 ஜூலை 2025      விளையாட்டு
Ben-Stokes 2024-11-02

Source: provided

ஓவல் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் திடீரென விலகியுள்ளார். இன்று நடைபெறும் போட்டியில் 4 மாற்றங்களை இங்கிலாந்து அணி செய்துள்ளது. 

இன்று தொடக்கம்...

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 5-வது டெஸ்டில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பதால் இந்தப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்தியா தீவிரமாக உள்ளது.

விளையாட மாட்டார்.. 

அதேவேளையில், போட்டியை சமன் செய்தாலே தொடரை வெல்ல முடியும் என்பதால் இங்கிலாந்து அணியின் வெற்றி முனைப்பில் இருக்கிறது. இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவாக நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தோள்பட்டையில்...

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பென்ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக ஓல்லி போப் அணியை வழிநடத்துவார் என்றும் இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. . மேலும் வேகப்பந்து வீச்சாளார் ஜோப்ரா ஆர்ச்சரும் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமானது. இது தவிர இன்றைய போட்டியில் பங்கேற்கும் பிளேயிங் லெவனில் மேலும் 3 மாற்றங்களை இங்கிலாந்து அணி செய்துள்ளது.  

இங்கிலாந்து அணி:

ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் டாசன் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் விளையாட மாட்டார்கள் எனவும் அவர்களுக்கு பதிலாக கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன் மற்றும் ஜோஷ் டோங்கு ஆகியோர் அணியில் இடம் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து