முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பறக்கும் ரயில் - மெட்ரோ ரயில் இணைப்புக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      இந்தியா
Metro 2024-01--02

Source: provided

புதுடெல்லி : சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ ரயில் இணைப்புக்கு கொள்கை அளவில் ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது என மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி ரூ.22,800 கோடி 15 ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1,700 கி.மீ தூரத்தில் மார்ச் 2025 வரை 665 கி.மீ பணிகள் ரூ.7,591 கோடி செலவில் நிறைவு பெற்றுள்ளது. 9 வழித்தடங்கள், 3 அகலப்பாதைகள் மாற்றம், 3 இரட்டை வழித்தடம் இதில் அடங்கும். 2019-14ல் ரூ.879 கோடியாக இருந்த நிதி 2025-26-ல் ரூ.6,526 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தி.மலை - திண்டிவனம், மொரப்பூர் - தருமபுரி, மன்னார்குடி - பட்டுக்கோட்டை பணிகள் தாமதம் ஆகி உள்ளது. நிலம் கையகப்படுத்துவதை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு தேவை. ரயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நிலம் கையகம் செய்வதில் தாமதம் இதற்கு காரணம்.

சென்னை பறக்கும் ரயில் - மெட்ரோ ரயில் இணைப்புக்கு கொள்கை அளவில் ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. சென்னை பறக்கும் ரயில் சேவையை மாநில அரசிடம் ஒப்படைக்கவும் ஒப்புதல் தந்தது ரயில்வே வாரியம் என எம்.பி.ஆர்.தர்மர் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து