முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசியில் ரூ.2,200 கோடியில் திட்டங்கள்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      இந்தியா
mODI 2023-05-25

Source: provided

புதுடில்லி :  உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் ரூ.2200 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைககிறார்.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; வாரணாசியில் சாலை இணைப்பை மேம்படுத்துவதற்காக, பிரதமர் பல முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.  ஸ்மார்ட் விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மற்றும் ரூ.880 கோடிக்கு மேல் மதிப்புள்ள மின்சார உள்கட்டமைப்பை நிலத்தடியில் அமைக்கும் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க, ராம்குண்ட், மந்தாகினி, ஷங்குல்தாரா உள்ளிட்ட பல்வேறு குளங்களில் நீர் சுத்திகரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார், அத்துடன் நான்கு மிதக்கும் பூஜை மேடைகள் நிறுவப்படும். 

கிராமப்புறங்களில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 47 கிராமப்புற குடிநீர் திட்டங்களையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். மகாமனா பண்டித மதன் மோகன் மாளவியா புற்றுநோய் மையம் மற்றும் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் சிடி ஸ்கேன் வசதிகள் உள்ளிட்ட மேம்பட்ட மருத்துவ உபகரண நிறுவல்களை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார். மேலும், அவர் ஒரு விலங்கு கருத்தடை மையத்தையும் அதனுடன் தொடர்புடைய நாய் பராமரிப்பு மையத்தையும் திறந்து வைப்பார்.

 இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து