முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் சேவை ரத்து

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      இந்தியா
India-post-2024-07-15

Source: provided

புதுடில்லி : அஞ்சல் துறையின் சேவையில் புதிய மாற்றம் மேற்கொள்ளப் படுகிறது, செப்.1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கப்பட்டு, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.  

இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் விரைவாக அஞ்சலை சேர்க்கும் வகையிலும் விரைவாக அஞ்சலை சேர்க்கும் வகையிலும் இந்த புதிய மாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும், இரண்டு பிரிவுகளை ஒன்றிணைக்கும் போது ஒரே பிரிவில் அஞ்சல் விநியோகிக்கப்படும் நிலவரத்தை மக்களால் எளிதாகக் கண்காணிக்கவும் இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைப்பின்போது, ஒரு அஞ்சலின் பாதுகாப்புக் கருதி பதிவு அஞ்சலை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள், விரைவு அஞ்சலையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அஞ்சல் வழங்கப்பட்டதற்கான ரசீதும், உரியவரிடம் சேர்க்கப்பட்டதற்கான சான்றும், விரைவு அஞ்சலில் கூடுதலாக சேர்க்கப்படும். விரைவு அஞ்சலையும், பதிவு அஞ்சலையும் ஒன்றிணைக்கும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆகஸ்ட் மாதம் இறுதிவரை இவ்விரு சேவைகளும் வழக்கம் போல செயல்படும். செப்டம்பர் முதல், பாதுகாப்பாகச் சென்று சேர வேண்டிய அஞ்சல்களை விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். தற்போது, விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்படும் அஞ்சல்கள் அடுத்த நாளே விநியோகிக்கப்படும். தொலைதூர அஞ்சல்கள் அதிகபட்சம் 5 நாள்களுக்குள் சென்று சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து