முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேஜஸ்வி யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2025      இந்தியா
Tejaswi-Yadav

Source: provided

புதுடெல்லி : இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருந்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தேஜஸ்வி யாதவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி நடைபெற்றது.  ஒரு மாத காலமாக நடந்த திருத்தப் பணி முடிந்த நிலையில், நேற்று தேர்தல் ஆணையம் பீகாருக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. 

இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ்,    வரைவு வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயர் விடுபட்டுள்ளது. இதனால், நான் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும்.  என்றார். இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "தேஜஸ்வி யாதவ் கூறிய குற்றச்சாட்டு தவறானது. வரைவு வாக்காளர் பட்டியலில், 204-வது வாக்குப் பதிவு மையத்தில் 416-வது வரிசை எண்ணில் தேஜஸ்வியின் பெயர் இடம்பெற்றுள்ளது  என்று கூறியது.

இந்நிலையில், இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருந்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தேஜஸ்வி யாதவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:  முதல் கட்ட விசாரணையில், நீங்கள் காட்டிய வாக்காளர் அடையாள அட்டை எண் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே, உங்கள் அடையாள அட்டையின் அசலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அப்போதுதான் முழுமையாக விசாரிக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து